Sunday, February 19, 2012



ரொம்ப நாளாக உணவு தானியங்கள் மற்றும் உணவு பதார்த்தங்கள் போக்குவரத்தின் போது வீணாகின்றன   என்பது பற்றி  ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் நீட்சியே இந்த பதிவு.

இந்த பதிவு வெறும் புள்ளிவிவரம் பொறுட்டோ அல்ல கருத்துக்கணிப்பு சார்ந்ததோ அல்ல. சென்னை ராயபுரம் தொடர்வண்டி நிலையம் வரும் உணவு தானியங்கள் தொடர்வண்டியில் இருந்து கனரக வண்டிகளுக்கு மாற்றும் போதுமட்டும் வீணாகும் உணவு தானியங்கள் மட்டும் சில டன்கள்.(1  டன் 1000 கிலோ )  ஆகும்.


சென்னை துறைமுகத்தில் இப்படி வீணாகும் சக்கரை, சோளம் ஆகியவை பல ஆயிரம் கிலோவிற்கும் மேல். இங்கிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருள்களில் கிட்டதட்ட கால்வாசி இப்படி போக்குவரத்துக்கு மூலமாக வீனாகின்றன.இதில் விரைவில் அழுகும் பொருளான காய்கறி, கனிகள்  மற்றும் இறைச்சி, மீன் போன்றவற்றின் நிலைமை படுமோசம்.

இப்படி வீணாகும் உணவுபொருட்கள் பெரும்பாலும் அரசு சார்ந்த கையாளுதல் போதுதான் நடக்கிறது. தனியாரின் போக்கு லாபநோக்கம் கொண்டதினால் இங்கு வீணாகும் அளவு மிக குறைவு.

உணவு பொருட்கள் இடமாற்றம் செய்யும் பொது அவை சரியாக கட்டபடுவதில்லை (PACKING) அல்லது தரமான பைகள் ஊபயோகிபதில்லை பெரும்பாலும் கிழிந்து இரைந்துகொண்டே  செல்கின்றன. கோடிகளில் வீணாகும் உணவுபொருட்கள் சில ஆயிரம் செலவின் மூலம் சரிசெய்யலாம். நமக்கென்ன நம்ப சொத்தா அழிகின்றது என அரசு அலுவலர்களின் மெத்தனபோக்கும் இதற்கு ஒரு காரணம்.

வீணாகும் ஒவ்வொரு தானியமும் ஒரு விவசாயின் பல மாத உழைப்பு உழுபவன் ஒரு நெல்லை கூட வீணாக்க மாட்டான். உங்கள் சம்பளம் உயர்த்தபடாதபோது, ஞாயமான பதவி உயர்வு கிடைக்காத போது உங்கள் உழைப்பு நிராகரிப்பதை உணர்வதை போலதான் நம் வீணாகும் ஒவ்வொரு தானியமும். நிராகரிக்கப்பட்ட விவசாயின் உழைப்பும்.
கவனிக்குமா அரசு!!!.
                                 உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுகொல்கின்றேன்.