Monday, January 30, 2012


செய்தி : மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

                          ஆம் இன்று அண்ணா ஹசாரே முதல் சோனியா ,குப்பன் ,சுப்பன் என்ன எல்லோரும் அரசியல் செய்ய காந்தி தேவை படுகிறார்.காந்தி இல்லாத வாழ்வை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது தன மகனின் ஸ்கூல் பீஸ் ,முதல் ஆக்ஸ்போர்ட் வரை காந்தி சிரித்தாக வேண்டும். மூணாவது பொண்டாட்டிக்கு டிவி வாங்க சாரி டிவி ஸ்டேஷன் வாங்க ,சின்ன வீட்டுக்கு பெரிய வீடு வாங்க ,கட்சில பதவி வாங்க ,இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்   ஆதரவு  கொடுக்க என்ன காந்தி ஆயுளில் செய்ததை விட அச்சில் செய்தது ஏராளம்.

                       பாவம் மீடியா கூட இதற்கு ஒதுக்கியது தலைப்பு செய்தியில் 30  விநாடி தான். விளம்பர இடைவேளையில் அவளோதான் செய்தி வசிக்க முடிந்தது.

                       வேறு ஒன்றும் வேண்டாம் உங்கள் அடுத்த தலைமுறைக்கு வரலாற்று புத்தகம் தாண்டி ஒரு உலகை அறிமுகம் செய்யுங்கள் நாம் பெற்றதுகாக என்ன இழந்தோம் என்பதை பற்றி சொல்லுங்கள். சுதந்திரம் போற்ற உயிரை துச்சமென துறந்த தியாகிகளை பற்றி சொல்லுங்கள்.

                       நாம் அடுத்த தலைமுறையேனும் முதுகெலும்புடன் வாழ  பழகிக் கொள்ளட்டும்  நாம் நாட்டின் பிணியை தீயிட்டு கொல்லட்டும்.


உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுகொல்கின்றேன்.           
                     

               

Saturday, January 28, 2012

கடவுள்களின் உரையாடல்.



           அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்து   தொடர்வண்டியில் வீடு   திரும்பி கொண்டிருந்தேன்.எனது நிறுத்தம் இரண்டாவதே என்பதால் சன்னல் ஓரம் இருக்கை கிடைத்துவிட  கைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டு  செவிபேசி மத்தியில் தொலைந்து கொண்டிருந்தேன். அருகில் கை குழந்தையுடன் ஒரு நடுத்தரவர்க  தம்பதி அமர்ந்திருந்தனர்.நல்ல கருப்பாக அழகா இருந்தது குழந்தை. அதன் தாய் அதனுடன் அதன் மொழியில் ஏதோ கொஞ்சிகொண்டிருந்தார். சில நிறுத்தம் சென்று எதிர்வரிசையில் மற்றும் ஒரு தம்பதி பெண் குழந்தையுடன் வந்து அமர்ந்தனர்.கைபேசியில் பாடலை மாற்றிவிட்டு சுற்றி ஒரு நோட்டமிட்டேன்.என்னை  போல் பலரும் காதில் பாடலுடன் நேரத்தை உழற்ற முற்பட்டிருந்தனர், சிலர் அருகில் இருந்தவருடன் அரசியல் முதல் ஆகாயம் வரை ஏதேதோ பேசிகொண்டிருந்தனர்.

அப்போதுதான் அந்த காட்சி கண்ணில் பட்டது எதிர்வரிசையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்த குழந்தை என் அருகில் உள்ள குழந்தையிடம் கை நீட்டி தத்தக பித்தக்க வென்று ஏதோ சொல்ல அதை புரிந்தது போல இந்த குழந்தையும் கீ க்யா என ஏதோ சொல்லிற்று.ஒரு வேலை  கடவுள் இருந்து ! சில வேலை கடவுள்களும் இருந்து.!!! பேசிக்கொண்டால் இப்படிதான் இருக்குமோ என தோன்றியது. இதை கவனித்த அந்த குழந்தையின் தாய் பாப்பாவிற்கு டாட்டா காட்டு என்று சொல்ல, பக்கத்தில் இருந்த குழந்தையின் தந்தை "சே ஹாய் சே ஹாய்" என சொல்லிகொண்டிருந்தார். அப்போதுதான் ஏன் இவர்கள் குழந்தையின் மழலையை ரசிக்க தோன்றவில்லை ஏன் இவர்கள் இப்படி ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்கள் என்றே தோன்றியது.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

இவர்கள் ஒரு பலகினமான சமுதாயத்தை ஒரு வலுவிழந்த தலைமுறையை வளர்கிறார்கள். சுயம் அறியாமல், தன் குடி, பாரம்பரியம், மொழி என யாதும் அறியாத அடையாளம் அற்ற பொருள்  ஈட்டும் சந்தை பொருளாக தம் குழந்தையை பார்கிறார்கள்.
ஆங்கில மோகம் கொண்டு அவன் உடை, உணவு மருந்து , என நாம் பின் பற்றி இழந்தது ஏராளம்.

தாய் பாலை போல தாய்மொழியையும் சேர்த்தே புகட்ட வேண்டியது அவசியம்.





Sunday, January 8, 2012

தமிழரும் தமிழர் உணவும்:

எங்கே செல்கிறோம் நாம் நாகரிகம் என்ற பெயரில் நாம் நமது உண்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறந்து கொண்டிருக்கிறோம்.
நாம் முன்னோர்கள் பயிர்செய்து உண்ட தானியங்கலாகிய கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், வரகு ஆகிய சிறு தானியங்களை அறவே மறந்து விட்டோம்.
பலர் இன்று அரிசி சோற்றிற்கு அடிமையாகிவிட்டோம்.கேழ்வரகு தெரியுமா என்றால் அது என்ன புது டெசெர்டா  என கேட்கின்றனர்.பிஸா ,பெர்கர் என சில 100 ரூ செலவு செய்யும் இவர்கள் 35 - 40 வயதில் மருத்துவமனைகளில் பல 100 செலவுசெய்கிரார்கள்.
வெளிநாடுகளில் குதிரைக்கு கொடுக்கும் ஓட்ஸ்சை கிலோ 120 - 150  ரூ கொடுத்து வாங்கும் இவர்களுக்கு இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் கேழ்வரகு, கம்பு  20 ரூ கொடுத்து வாங்குவது கவுரவ  குரைசல்  (ஸ்டேடஸ் ப்ராப்லம்) ஆகிவிடுகிறது. இந்த வெளிநாடுகாரனின் வியாபார தந்திரத்துக்கும் விளம்பர மோகத்துக்கு அடிமையாகிவிட்டோம்.
இவர்கள் வள்ளுவன் கூறியது போல கனிஇருப்பக் காய்கவர்ந்தவர்கள். உணவே மருந்தாக உட்கொண்ட தமிழரின் மரபினை போற்றுவோம் பின்பற்றுவோம்.