Sunday, June 17, 2012

நாய்கள் ஜாக்கிரதை!


                                                      அன்றாடம் நாம் எதன் பொறுட்டோ பயணிக்க நேறுகிறோம் இப்படி நாள்தோறும் பொது போக்குவரத்து பயன் படுத்துகிறோம் ஆனால் இப்பயனங்களில் நாம் எப்படி தனி மனித ஒழுக்கம் பின்பற்றுகிறோம்   எண்ணி பார்த்தால் பெரும்பாலும் யாரும் அப்படி நடக்கவில்லை என்பதே உண்மை.

                                                      பெரும்பாலும் நாம் மேற்கத்திய சமுதாயத்தை விட நாம் பண்பாடு ஒழுக்கம் நிறைத்த நாடு என்று ஒரு மாய பிம்பத்தை சுமந்து திரிகிறோம் ஆனால் உண்மை வேறுமாதிரியாக இருக்கிறது. கலாச்சாரம் மிக்க நாடு நம்முடையது என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு கிடையாது.ஆனால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் நாம் தேங்கிவிட்டோம் தனிமனித ஒழுக்கத்தில் ஜப்பான் ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனி மனித ஒழுக்கம் பெரும்பாலும் பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர்.


                                                      
                                                      இங்கு சாலை விதி முதற்கொண்டு சாலையில் எச்சில் உமிழும் வரை ஓர் அலட்சிய போக்கே மேலோங்கி உள்ளது.இங்கு பல நாய்கள் கம்பத்தை பார்த்த உடன் எச்சில் உமிழ்வதையோ, முட்டுச்சந்தில் சிறுநீர் கழிப்பதையோ அடக்கமுடியாத இட்சையாககொள்கின்றன.   பெரும்பாலும் இன்று இளைய தலைமுறையினர் பான், குட்கா, மாவா, புகையிலை என போதைக்கு அடிமையாகிவிட்டனர்.பேருந்திலும், தொடர்வண்டியும் படியில் பயணித்தவாரே எச்சில் உமிழ்கின்றனர்.நான் பயணிக்கும் அணைத்து தொடர் வண்டி நிறுத்தத்திலும் எல்லா தூண்களும் எச்சில் கறை படிந்தே காணபடுகின்றன எல்லா மேம்பாலம் படிகளின்  கிழேயும் சிறுநீர் கழிக்கின்றனர்.இரும்பு பாதை யாவும் திறந்தவெளி கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர்.
                                                      
                                                      நமது சமுதாயத்தில் பெற்றோர்களோ கல்வி படதிட்டமோ தனி மனித ஒழுக்கத்தை பைற்றுவிப்பதில்லை என்பதே இதற்கு முதற்காரணம் சாலையில் சிறுநீர்/மலம் கழிக்க தாய்மார்களே சிறு குழந்தைக்கு சொல்லி தருகின்றனர் இதுவே கால போக்கில் பழக்கம் ஆகிவிடுகிறது.பள்ளியில் தனிஒழுக்கம் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கற்றுத்தர பட வேண்டும் அங்கில வழி கல்வி வேலை வாய்ப்புடன் கூடிய கல்லூரி என பெற்றோர்கள் பொருளாதார கண்நோடதைவிட்டு நல்ல மனிதரை ஊக்குவிக்கும் கல்வித்திட்டத்தை உடைய பள்ளியை/கல்லூரியை தேர்வுசெய்ய வேண்டும்.அதற்கு அரசும் தனிமனித ஒழுக்கம் குறித்த பாடத்திட்டத்தை அனைவருக்கும் அளித்திட வழிவகை செய்திட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.அவர்களுக்கு அதன் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.இங்கும் இதெல்லாம் தடுக்க சட்டம் கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கவேண்டும்.

இனியேனும் நாய் வழக்கம் விட்டு நல்ஒழுக்கம் கடைபிடிப்போம்.
abi abi abi abi abi abiabi abi abi abi abi abiabi abi abi abi abi abiabi abi abi abi abi abiabi abi abi abi abi abi