வட
சென்னையின் பிராந்திய உணவான அத்தோவை பற்றிய பதிவிது. அத்தோ வடசென்னையில் மட்டும்மே
கிடைக்க பெறும் மாலை நேர சிற்றுண்டி. இது
வடசென்னையின் அடையாள உணவு. அத்தோ பர்மீசியத்தை(பர்மா) பூர்விகமாக கொண்ட நூடுல்ஸ்
உணவு. இதன் செய்முறை மிக எளிது கோதுமை அல்லது அரிசி நூடுல்ஸ்சுடன் பொடியாய் நறுக்கிய
முட்டைகோஸ், வெங்காயம், போஜோ(ஓட்டவடை),எண்ணெய்,வருத்த பூண்டு, கடலைமாவு,
புளிகரைச்சல் அகியைவையை ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கிளறி அப்படியே
பரிமாறப்படும். இதனுடன் வாழைதண்டு சூப் பரிமாறுகிறார்கள். இதேமாதிரி அத்தோ ப்ரை
என்பது நூடுல்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், ஆகியவையுடன் முட்டை சேர்த்து பெரிய
தடிமனனான இரும்பு தோசை கல்லில் நன்கு வதங்கும் வரை வருகின்றனர்.(முட்டையுடன் மீன்
அல்லது கறி சேர்வா சேர்த்தும் செய்கின்றனர் என கேள்வி பட்டேன்).பெரும்பாலும்
ரோட்டோர கடைகளில் அத்தோ விற்கபடுகின்றன சென்னை பீச் ஸ்டேஷன் எதிரே உள்ள
போஸ்ட்டாபிஸ் பின்னால் வியாபாரம் வெலுத்து
வாங்குகிறது வரிசையாக இரண்டு மூணு தள்ளுவண்டி கடைகளில் அனைத்து நிலை மக்களும் கால்கடுக்க
நின்று சாப்பிடுகின்றனர் வீட்டிற்றிகும் பார்சல் பறக்கின்றது. ஒரு ப்ளேட் 35 ரூபாய்,
½ ப்ளேட் 30 ரூபாய்.வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் தவறாமல் ருசிக்க வேண்டிய உணவு.