Tuesday, August 28, 2012

இனிதே நடந்தேறிய வலைபதிவர் கூட்டம்

 

வலை பதிவர் கூட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை இனிதே நடந்தது. நான் பங்கேற்கும் முதல் வலைபதிவு கூட்டம் என்பதால் சிறு பரபரபோடுதான் இருந்தது. பிலாசபி பிரபாவிற்கு ஒரு போன் போட்டு தல இந்தமாரி நானும் வரேன் என்றதும் ஓகே வாங்க என்றதோடு விழா நடக்குமிடத்திற்கு செல்ல ஏற்படும் செய்துகொடுத்தார் 

கலகல்கள்

  • வீட்டிலிருந்து வலை பதிவர் கூட்டம் நடக்கும் மண்டபம் வரை தன் வண்டியிலேயே அழைத்து சென்று மீண்டும் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்த சேதுராமன் அவர்களுக்கு  நன்றி.
  • போன் செய்தபோது இரவு 9 மணியளவிலும் தெளிவாக (எவ்வளவு போட்டாலும் நாங்க ஸ்டீடி) சேதுராமனை என்னுடன் கோர்த்து விட்ட பிரபா ஒயின்ஷாப் ஓனர் அவர்களுக்கு நன்றி.என்ன மூணுவாட்டி  பிரபா கால் செய்துவிட்டு எதுவுமே பேசாமல் யாரிடமோ கடலை வருத்துகொண்டிறுந்தார். 
  • பல பிரபல பதிவர்கள் புதிய நண்பர்கள் அறிமுகம்.நமக்கு தெரிந்த சில பதிவர்களை (மயிலன்,  ஒயின்ஷாப் பிரபா ,கோவி)நேரில் காணும் வாய்ப்பு.
  • மயிலன், கோவி நடுவில் நான்.

  • மூத்த பதிவர்கள் மற்றும் பட்டுகோட்டை பிரபாகரன் என பலரது அறிமுகங்கள்.   
  • ஒருநாளில் எகிறிய  வலைப்பூவின் வாசகர் எண்ணிக்கை.  
  • இவை எல்லாத்தையும் தூக்கிசாப்பிடும் இருந்தது அளவில் மதியம் சமையான சாப்பாடுதான் (நமக்கு அதான முக்கியம் முதல் மரியாதை நமக்குதான். பந்தில முதல் ஆளா உட்காந்துடோம்ல).
சொதபல்கள்

  • கலையில் காப்பில சக்கரை இல்லை.
  • மதியம் தாக்காளி சூப் சூடு கம்மி.
  • பட்டுக்கோட்டை பிரபாகரன் பேசுறாருன்னு போண்டா கடைசியாதான் கிடைச்சுது.
  • சேதுராமனின் வண்டி வீடு திரும்பும்போது பஞ்சர்ராகி ஒரு மணிநேரம் தாமதமாக வீடு போய் சேர்ந்தது. 

3 comments:

  1. ம்ம்ம் .. நெறைய எழுதுங்க தோழரே ...

    ReplyDelete
    Replies
    1. நிச்சியமாக இனி தொடர்ந்து எழுதுவேன்

      Delete