வலையுலக நண்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எந்த
வயதையுடையவராயினும் தீபாவளி என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது இனிப்புகளும்
பட்டாசும் புத்தாடையும் தான். நான் பள்ளியில் படிக்கும் போது தீபாவளி என்பது நவம்பர்
மாதம் பிறந்தவுடனேயே ஆரம்பித்துவிடும் அப்போது துணி எடுத்து கொடுத்தால்தான்
தீபாவளி முந்தினநாலாவது கிடைக்கும் வீட்டில் செலவு குறித்து கையை பிசைந்து
கொண்டிருக்கும் பொது பட்டாசு குறித்த கனவுகள் சரவெடியாய் வெடிக்கும் எதிர் வீடு
சரவணனை விட ,பள்ளிகூடத்தில் பக்கத்தில் உட்காரும் ரவியைவிட 1௦௦ரூபாய்யாவது அதிகம்
வாங்கிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். போன தீபாவளிக்கு சரவணன் வெடித்த 1௦௦௦௦
வாலா ,பாபு கொளுத்திய ட்ரிபுள் சாட் என பெரிய லிஸ்ட்டே தயார் செய்து
வைத்திருப்போம். கடைசியில் கிடைப்பது என்னவோ ரெண்டு பாக்கெட் மிளகாய் வெடி அல்லது
நாட்டு வெடி, சில கம்பிமத்தாப்பூ,
புஸ்வானம்,சாட்டை,பாம்பு மாத்திரை பாக்கெட்டுகள் மட்டுமே. மிளகாய் வெடியில் பாதி
வெடிக்காது அதையெல்லாம் பிரித்து வெடி மருந்தை மட்டும் ஒன்றாய் கொட்டி அப்துல்
கலாமின் கிரயோஜெனிக் என்ஜின் தயாரிப்பதுபோல் ஆராய்ந்து கொண்டிருப்போம். தீபாவளி
அன்று தான் பெரும்பாலும் என்னை தேய்த்து குளிப்போம் எங்கள் தலையில் என்னை தேய்க்க எங்கள்
அம்மா படும் பாடு சொல்லி மாளாது.அவசர அவசரமாக குளித்து விட்டு வெடி போட சிட்டாய்
பறந்து விடுவோம்.துப்பாக்கி ரோல் கேப் வீட்டினுள் காது பிளக்க தாத்தா பாட்டியின் கோபத்திற்கு ஆளாவோம். கோபம் எல்லாம்
கொஞ்ச நேரம் தான்.
புது சட்டை போட்டுக்கொள்வது என்பது ஒரு அலாதியான விஷயம்.அதுவும் ஒரு
வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் போதும் துணிக்கடையில் தீபாவளிக்கு
சட்டை எடுக்கும் போது ஒரு போர்களமே நடக்கும். அவனுக்கும் மட்டும் நல்ல சட்ட வாங்கி
குடித்திடிங்க என்னீது நல்லாவே இல்ல என்று அண்ணன் தம்பிக்குள் பனி போர்
நடக்கும்.பட்டாசு தீர்ந்ததும் பணியாரம் இனிப்பு வேட்டை ஆரம்பமாகும்.பத்து
நிமிடத்திற்கு ஒரு முறை சமையல் அறை நுழைந்து கை நிறைய அள்ளி கொண்டு அம்மாவின்
கையில் சிக்காமல் ஓட்டம் பிடிப்போம்.இன்றும் இந்த குழந்தைகளின் உலகம் பெரும்
மாற்றத்தினை அடைந்துவிடவில்லை ஆனால் வீட்டின் பெரியவர்களின் நிலை இன்று அடியோடு
வேறு.பண்டிகையின் சாராம்சம் மறந்து இன்று எல்லாம் நாலு சுவருக்குள்ளும் தொலைகாட்சி
முன்னும் முடிந்து விடுகிறது இன்று யாரும் ஊரில் உள்ள உறவுகளுக்கு பொங்கல்
வாழ்த்து அட்டையோ தீபாவளி வாழ்த்தோ அனுப்புவதில்லை. கடிதம் எழுதுவது வாழ்த்து
அட்டை அனுப்புவது வழகொழிந்து விட்டது தான்.எல்லாரிடமும் கைபேசி இருகின்றது 5ரூபாயில்
இன்று ஊரையே போனில் விசாரித்து விடலாம் ஆனால் நேரம் வாய்க்காமல்
ஓடிகொண்டிருக்கிறோம்.
பண்டிகைகள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும்
வேற்றுமைகளை களைந்து ஒன்று கூடி மகிழ்ந்து, உண்டு, உறவாடுவதற்காக என்பதற்காக
தோற்றுவித்தோம் ஆனால் காலபோக்கில் அது உறவுகளுக்குள் சுருங்கி இன்று வீடுகளுக்குள்
முடங்கி விட்டது எத்தனை பேர் இன்று நாம் வீட்டின் அருகில் உள்ளவர்களுடன் வாழ்த்துகளை
பரிமாறிகொள்கின்றோம் எல்லாம் ஒரு புன்முறுவலில் முடிந்துவிடுகிறது.
இன்றும்
கிராமப்புறத்து மக்களும் தென் தமிழகத்து மக்கள் தான் இன்று கோயம்பேடில்
குவிகின்றனர்
இன்று எல்லாமே ரெடிமேட் கலாச்சாரமாகிவிட்டது இட்லி
மாவில் இருந்து வீடு வரை எல்லாம் ரெடிமேட் ஆக கிடைகின்றது பண்டிகையும் அப்படி
ஆகிவிட்டது.
தீபாவளிக்கு
வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்கதை பேசி மகிழ்ந்து தீபாவளிக்கு இனிப்புகள், பணியாரம் செய்யம் காலம் எல்லாம் இப்பொது இல்லை ஸ்வீட் ஸ்டால் சென்று ஒரு கிலோ
இனிப்பு, கிரைண்டரில் மாவு அரைத்து வடை சுட்டு டிவி முன் அமர்ந்து
விடுகின்றனர்.தேடி தேடி பட்டாசு வாங்குவது கூட இப்பொது கிப்ட் பாக்ஸ்சோடு முடிந்து
விட்டது.
இன்று
பண்டிகையின் நிறம் மாறி இருகின்றது கொண்டாட்டத்தின் வகை மாறி இருகின்றது.
சோ சொல்ல வரது
என்னன்னா எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment