Wednesday, May 1, 2013

வலையில் கூர்தீட்டபடும் சாதி


   இன்று தமிழகத்தில் மீண்டும் சாதிய முன் நிறுத்திய பார்வை தலைதூங்கி உள்ளது. மெத்த படித்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்போர் மத்தியிலும் இந்த வழக்கத்தை பார்க்க முடிகின்றது. தன் சாதிய சக பணியாளிடம் மற்ற சமூகத்தை சார்ந்தோறை காட்டிலும் அதிகம் நெருக்கம் அல்லது முன்னுரிமை கொடுக்க படுகிறது. வெளிநாட்டில் அதுவும் சிங்கபூர் மலேசிய நாடுகளில் வேலை பார்த்து விட்டு வரும் சக பணியாளரிடம் இந்த எண்ணம் தழைதோங்கி உள்ளது என்ன்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

     சாதிமாட்டும் இன்றி ஆரிய திராவிட எண்ணம் இன்று சத்தமில்லாமல் பரவிவருகிறது. இந்த சாதிய தீ மெத்த படித்தவர்களின் மனதில் விதைக்க சமுக வலைதளங்களும் ஊடகங்களும் முக்கிய காரணம் தன் மதமோ சாதியோ சமூகமோ பிறரால் இந்த சமுக வலைதளங்கலில் இழிவு படுத்தப்படும் போது அல்லது விமர்சிக்க படும் போது அந்த தகவல் குறித்த எந்த உண்மையும் ஆராயபடாமல் கண்மூடித்தனமான எதிர்ப்பு அங்கே பதியபடுகிறது. சிலர் லைக்குக்கும் கமெண்டுக்கும் ஆசைப்பட்டு இந்த மாதிரியான தகவல்களை உண்மைத்தன்மை அறியாமல் பகிர்கின்றனர்.சில பதிவின் பின்னூட்டம் பார்த்தால் அங்கே ஒரு பொது கழிவறை அசுத்தம் சொற்களால் இறைத்து வைக்க பட்டிருக்கும்.பெரும்பாலும் பதிவரை கொச்சை படுத்தியோ இல்லை தைரியம் இருந்தால் அந்த மதத்தை பற்றி எழுது இந்த சதியை பற்றி எழுதவேண்டியது தானே என்று வேறு மதமோ சாதியோ சமூக பக்கம் திசை திருப்பி விடுவர். அவரும் நான் அக்மார்க் ஹால்மார்க் ஐஎஸ்ஐ என அனைத்து தர சான்றிதல் பெற்ற நடுநிலை வாதியாக தனை காண்பித்து கொள்ளும் வகையில் அந்த வேற்று சமூகத்தினரை சாடி இன்னொரு பதிவு போடு பின்னூட்டம் பாருங்கள் அந்த சாதியினரே நான் இவர்களை பற்றியும் எழுதியுள்ளேன் நான் நல்லவன் என்ற ரீதியில் பதிவை முடிப்பார்.

சாதி கலவரம் இங்கு வார்த்தையால் விதைக்கபடுகிறது.இந்த புறமுதுகு போரில் வாய் வீசும் பலரும் விசைபலகை வீரர்கள் வெள்ளை வேட்டி, முரட்டு மீசை, அருவாள் ஆயுதம் பதிலாக மடிப்பு கலையாத சட்டை ஜீன்ஸ் பேண்ட்,நன்கு மழிக்க பட்ட முகம்,கீபோர்டு மௌஸ் என திரியும் இவர்களை இன்று எல்லா பேருந்து நிறுத்தம் அலுவலகம் வணிக வளாகம் திரைஅரங்கு என் எல்லா இடத்திலும் கையில் ஒரு திரண்பேசியுடன் (ஸ்மார்ட்போன்) பார்க்கலாம்.

தமிழகம் இன்று சாதி கலவரத்தை முன்னோக்கி நகர்கின்றது. சாதிய சிந்தனை இன்று மீண்டும் இளைய தலைமுறையினர் இடம் வேரூன்ற துடிகின்றது அரசியல் சாதிய அமைப்புகள் இவ்விசகளைகளை நீர் பாசி வளர்கின்றன. 

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

டிஸ்கி: இந்த பாடலை இணையத்தில் தேடும் போதே பல சாதிய சண்டைகள் சாதிய சிந்தனைகள் இந்த பாடல் முன்னுதாரனமாக காட்டி முட்டி கொண்டுள்ளனர் கொடுமை.

1 comment:

  1. இந்தக் கொடுமையான தளங்களுக்கு செல்லாமல் இருப்பதே நல்லது... நன்றி...

    ReplyDelete