சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோர் என கருதப்படும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிழைக்க பட்டணம் செல்வது பற்றி ஆன ஒரு உரையாடலின் பதிவு :
கணவன்: பட்டணம் தான் போயிடலாம்
பஞ்சம் தான் பொழச்சிடலாம்
பட்டினியா கிடந்தாலும்
பரதேசியானாலும்
சாதிய தொலச்சிடலாம்
ஏழையா மட்டும் வாழ்ந்திடலாம்
மனைவி: தெருவோரம் கிடந்திடனும்
சாக்கடையில வாழ்ந்திடனும்
கா வயிறு கஞ்சிக்காக
காலமெலாம் தேஞ்சிடனும்
சனத்த தொலச்சிடனும்
வேண்டவே வேண்டாம்
நா வளத்த மாட்ட பிரிஞ்சிடனும்
க: கீழ்சாதி பார்வயில்ல
கைகட்டி நிக்கதேவயில்ல
மிதியடி மாட்டிக்கலாம்
கோயிலுள்ள போயிடலாம்
காசுபணம் கையிலிருந்தா
கடவுளகூட பார்த்திடலாம்
ம:களத்துமேடு இங்கிருக்கு
கழனி வேல தான் இருக்கு
சுடுகாட்டு குழிதவர
பட்டனத்துல வேறெங்க இடமிருக்கு
க:களத்துமேடு தானிருக்கு
கதிரெங்க வெளஞ்சிருக்கு
கழனிகாடெல்லாம் காங்கிரீட்டு முளைச்சிருக்கு
ஆறுமட்டுதானிருக்கு அல்ல கை மணல் எங்கிருக்கு
சுடுகாடும் இங்கிருக்கு
ம:பட்டணம் தான் போயிடலாம்
பட்டினியா கிடந்தாலும்
புள்ளைய படிக்கவச்சிடலாம்
தெருவோரம் வாழ்ந்தாலும்
சாதிய தொலச்சிடலாம்
எழையா மட்டும் வாழ்ந்திடலாம்
கணவன்: பட்டணம் தான் போயிடலாம்
பஞ்சம் தான் பொழச்சிடலாம்
பட்டினியா கிடந்தாலும்
பரதேசியானாலும்
சாதிய தொலச்சிடலாம்
ஏழையா மட்டும் வாழ்ந்திடலாம்
மனைவி: தெருவோரம் கிடந்திடனும்
சாக்கடையில வாழ்ந்திடனும்
கா வயிறு கஞ்சிக்காக
காலமெலாம் தேஞ்சிடனும்
சனத்த தொலச்சிடனும்
வேண்டவே வேண்டாம்
நா வளத்த மாட்ட பிரிஞ்சிடனும்
க: கீழ்சாதி பார்வயில்ல
கைகட்டி நிக்கதேவயில்ல
மிதியடி மாட்டிக்கலாம்
கோயிலுள்ள போயிடலாம்
காசுபணம் கையிலிருந்தா
கடவுளகூட பார்த்திடலாம்
ம:களத்துமேடு இங்கிருக்கு
கழனி வேல தான் இருக்கு
பக்கதுல ஆறிருக்கு
ஒண்டிக்க ஓலக்குடிசயிருக்குசுடுகாட்டு குழிதவர
பட்டனத்துல வேறெங்க இடமிருக்கு
க:களத்துமேடு தானிருக்கு
கதிரெங்க வெளஞ்சிருக்கு
கழனிகாடெல்லாம் காங்கிரீட்டு முளைச்சிருக்கு
ஆறுமட்டுதானிருக்கு அல்ல கை மணல் எங்கிருக்கு
சுடுகாடும் இங்கிருக்கு
கீழ்சாதி பொணம் பொதைக்க
விதிஎங்க விதிச்சிருக்கு ம:பட்டணம் தான் போயிடலாம்
பட்டினியா கிடந்தாலும்
புள்ளைய படிக்கவச்சிடலாம்
தெருவோரம் வாழ்ந்தாலும்
சாதிய தொலச்சிடலாம்
எழையா மட்டும் வாழ்ந்திடலாம்
No comments:
Post a Comment