அன்று வழக்கம் போல் அலுவலகம்
முடிந்து தொடர்வண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தேன்.எனது நிறுத்தம்
இரண்டாவதே என்பதால் சன்னல் ஓரம் இருக்கை கிடைத்துவிட கைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டு செவிபேசி மத்தியில் தொலைந்து கொண்டிருந்தேன். அருகில் கை குழந்தையுடன் ஒரு நடுத்தரவர்க தம்பதி அமர்ந்திருந்தனர்.நல்ல கருப்பாக அழகா
இருந்தது குழந்தை. அதன் தாய் அதனுடன் அதன் மொழியில் ஏதோ கொஞ்சிகொண்டிருந்தார். சில
நிறுத்தம் சென்று எதிர்வரிசையில் மற்றும் ஒரு தம்பதி பெண் குழந்தையுடன் வந்து
அமர்ந்தனர்.கைபேசியில் பாடலை மாற்றிவிட்டு சுற்றி ஒரு நோட்டமிட்டேன்.என்னை போல் பலரும் காதில் பாடலுடன் நேரத்தை உழற்ற
முற்பட்டிருந்தனர், சிலர் அருகில் இருந்தவருடன் அரசியல் முதல் ஆகாயம் வரை ஏதேதோ
பேசிகொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த காட்சி கண்ணில்
பட்டது எதிர்வரிசையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்த குழந்தை என் அருகில்
உள்ள குழந்தையிடம் கை நீட்டி தத்தக பித்தக்க வென்று ஏதோ சொல்ல அதை புரிந்தது போல
இந்த குழந்தையும் கீ க்யா என ஏதோ சொல்லிற்று.ஒரு வேலை கடவுள் இருந்து ! சில வேலை கடவுள்களும் இருந்து.!!! பேசிக்கொண்டால் இப்படிதான் இருக்குமோ என தோன்றியது. இதை கவனித்த அந்த குழந்தையின்
தாய் பாப்பாவிற்கு டாட்டா காட்டு என்று சொல்ல, பக்கத்தில் இருந்த குழந்தையின் தந்தை "சே ஹாய் சே ஹாய்" என சொல்லிகொண்டிருந்தார். அப்போதுதான் ஏன் இவர்கள் குழந்தையின் மழலையை
ரசிக்க தோன்றவில்லை ஏன் இவர்கள் இப்படி ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்கள் என்றே
தோன்றியது.
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
இவர்கள் ஒரு பலகினமான சமுதாயத்தை ஒரு
வலுவிழந்த தலைமுறையை வளர்கிறார்கள். சுயம் அறியாமல், தன் குடி, பாரம்பரியம், மொழி என யாதும்
அறியாத அடையாளம் அற்ற பொருள் ஈட்டும்
சந்தை பொருளாக தம் குழந்தையை பார்கிறார்கள்.
ஆங்கில மோகம் கொண்டு அவன் உடை, உணவு மருந்து , என நாம் பின் பற்றி இழந்தது ஏராளம்.
தாய் பாலை போல தாய்மொழியையும் சேர்த்தே
புகட்ட வேண்டியது அவசியம்.
பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் நீங்கள் பல உச்சங்களைத்தொட வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
ReplyDelete