Monday, January 30, 2012


செய்தி : மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

                          ஆம் இன்று அண்ணா ஹசாரே முதல் சோனியா ,குப்பன் ,சுப்பன் என்ன எல்லோரும் அரசியல் செய்ய காந்தி தேவை படுகிறார்.காந்தி இல்லாத வாழ்வை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது தன மகனின் ஸ்கூல் பீஸ் ,முதல் ஆக்ஸ்போர்ட் வரை காந்தி சிரித்தாக வேண்டும். மூணாவது பொண்டாட்டிக்கு டிவி வாங்க சாரி டிவி ஸ்டேஷன் வாங்க ,சின்ன வீட்டுக்கு பெரிய வீடு வாங்க ,கட்சில பதவி வாங்க ,இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்   ஆதரவு  கொடுக்க என்ன காந்தி ஆயுளில் செய்ததை விட அச்சில் செய்தது ஏராளம்.

                       பாவம் மீடியா கூட இதற்கு ஒதுக்கியது தலைப்பு செய்தியில் 30  விநாடி தான். விளம்பர இடைவேளையில் அவளோதான் செய்தி வசிக்க முடிந்தது.

                       வேறு ஒன்றும் வேண்டாம் உங்கள் அடுத்த தலைமுறைக்கு வரலாற்று புத்தகம் தாண்டி ஒரு உலகை அறிமுகம் செய்யுங்கள் நாம் பெற்றதுகாக என்ன இழந்தோம் என்பதை பற்றி சொல்லுங்கள். சுதந்திரம் போற்ற உயிரை துச்சமென துறந்த தியாகிகளை பற்றி சொல்லுங்கள்.

                       நாம் அடுத்த தலைமுறையேனும் முதுகெலும்புடன் வாழ  பழகிக் கொள்ளட்டும்  நாம் நாட்டின் பிணியை தீயிட்டு கொல்லட்டும்.


உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுகொல்கின்றேன்.           
                     

               

2 comments:

  1. ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு மாதிரி இருக்கு.

    'பழகிக் கொள்ளட்டும்' என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.தவறை சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி நிஜாம்.

    ReplyDelete