Saturday, September 8, 2012
Tuesday, August 28, 2012
இனிதே நடந்தேறிய வலைபதிவர் கூட்டம்
கலகல்கள்
- வீட்டிலிருந்து வலை பதிவர் கூட்டம் நடக்கும் மண்டபம் வரை தன் வண்டியிலேயே அழைத்து சென்று மீண்டும் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்த சேதுராமன் அவர்களுக்கு நன்றி.
- போன் செய்தபோது இரவு 9 மணியளவிலும் தெளிவாக (எவ்வளவு போட்டாலும் நாங்க ஸ்டீடி) சேதுராமனை என்னுடன் கோர்த்து விட்ட பிரபா ஒயின்ஷாப் ஓனர் அவர்களுக்கு நன்றி.என்ன மூணுவாட்டி பிரபா கால் செய்துவிட்டு எதுவுமே பேசாமல் யாரிடமோ கடலை வருத்துகொண்டிறுந்தார்.
- பல பிரபல பதிவர்கள் புதிய நண்பர்கள் அறிமுகம்.நமக்கு தெரிந்த சில பதிவர்களை (மயிலன், ஒயின்ஷாப் பிரபா ,கோவி)நேரில் காணும் வாய்ப்பு.
- மயிலன், கோவி நடுவில் நான்.

- மூத்த பதிவர்கள் மற்றும் பட்டுகோட்டை பிரபாகரன் என பலரது அறிமுகங்கள்.
- ஒருநாளில் எகிறிய வலைப்பூவின் வாசகர் எண்ணிக்கை.
- இவை எல்லாத்தையும் தூக்கிசாப்பிடும் இருந்தது அளவில் மதியம் சமையான சாப்பாடுதான் (நமக்கு அதான முக்கியம் முதல் மரியாதை நமக்குதான். பந்தில முதல் ஆளா உட்காந்துடோம்ல).
- கலையில் காப்பில சக்கரை இல்லை.
- மதியம் தாக்காளி சூப் சூடு கம்மி.
- பட்டுக்கோட்டை பிரபாகரன் பேசுறாருன்னு போண்டா கடைசியாதான் கிடைச்சுது.
- சேதுராமனின் வண்டி வீடு திரும்பும்போது பஞ்சர்ராகி ஒரு மணிநேரம் தாமதமாக வீடு போய் சேர்ந்தது.
Sunday, June 17, 2012
நாய்கள் ஜாக்கிரதை!
அன்றாடம் நாம் எதன் பொறுட்டோ பயணிக்க நேறுகிறோம் இப்படி நாள்தோறும் பொது போக்குவரத்து பயன் படுத்துகிறோம் ஆனால் இப்பயனங்களில் நாம் எப்படி தனி மனித ஒழுக்கம் பின்பற்றுகிறோம் எண்ணி பார்த்தால் பெரும்பாலும் யாரும் அப்படி நடக்கவில்லை என்பதே உண்மை.
பெரும்பாலும் நாம் மேற்கத்திய சமுதாயத்தை விட நாம் பண்பாடு ஒழுக்கம் நிறைத்த நாடு என்று ஒரு மாய பிம்பத்தை சுமந்து திரிகிறோம் ஆனால் உண்மை வேறுமாதிரியாக இருக்கிறது. கலாச்சாரம் மிக்க நாடு நம்முடையது என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு கிடையாது.ஆனால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் நாம் தேங்கிவிட்டோம் தனிமனித ஒழுக்கத்தில் ஜப்பான் ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனி மனித ஒழுக்கம் பெரும்பாலும் பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர்.
இங்கு சாலை விதி முதற்கொண்டு சாலையில் எச்சில் உமிழும் வரை ஓர் அலட்சிய போக்கே மேலோங்கி உள்ளது.இங்கு பல நாய்கள் கம்பத்தை பார்த்த உடன் எச்சில் உமிழ்வதையோ, முட்டுச்சந்தில் சிறுநீர் கழிப்பதையோ அடக்கமுடியாத இட்சையாககொள்கின்றன. பெரும்பாலும் இன்று இளைய தலைமுறையினர் பான், குட்கா, மாவா, புகையிலை என போதைக்கு அடிமையாகிவிட்டனர்.பேருந்திலும், தொடர்வண்டியும் படியில் பயணித்தவாரே எச்சில் உமிழ்கின்றனர்.நான் பயணிக்கும் அணைத்து தொடர் வண்டி நிறுத்தத்திலும் எல்லா தூண்களும் எச்சில் கறை படிந்தே காணபடுகின்றன எல்லா மேம்பாலம் படிகளின் கிழேயும் சிறுநீர் கழிக்கின்றனர்.இரும்பு பாதை யாவும் திறந்தவெளி கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர்.
நமது சமுதாயத்தில் பெற்றோர்களோ கல்வி படதிட்டமோ தனி மனித ஒழுக்கத்தை பைற்றுவிப்பதில்லை என்பதே இதற்கு முதற்காரணம் சாலையில் சிறுநீர்/மலம் கழிக்க தாய்மார்களே சிறு குழந்தைக்கு சொல்லி தருகின்றனர் இதுவே கால போக்கில் பழக்கம் ஆகிவிடுகிறது.பள்ளியில் தனிஒழுக்கம் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கற்றுத்தர பட வேண்டும் அங்கில வழி கல்வி வேலை வாய்ப்புடன் கூடிய கல்லூரி என பெற்றோர்கள் பொருளாதார கண்நோடதைவிட்டு நல்ல மனிதரை ஊக்குவிக்கும் கல்வித்திட்டத்தை உடைய பள்ளியை/கல்லூரியை தேர்வுசெய்ய வேண்டும்.அதற்கு அரசும் தனிமனித ஒழுக்கம் குறித்த பாடத்திட்டத்தை அனைவருக்கும் அளித்திட வழிவகை செய்திட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.அவர்களுக்கு அதன் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.இங்கும் இதெல்லாம் தடுக்க சட்டம் கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கவேண்டும்.
இனியேனும் நாய் வழக்கம் விட்டு நல்ஒழுக்கம் கடைபிடிப்போம்.
abi abi abi abi abi abiabi abi abi abi abi abiabi abi abi abi abi abiabi abi abi abi abi abiabi abi abi abi abi abiSunday, February 19, 2012
ரொம்ப நாளாக உணவு தானியங்கள் மற்றும்
உணவு பதார்த்தங்கள் போக்குவரத்தின் போது வீணாகின்றன என்பது பற்றி
ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் நீட்சியே இந்த பதிவு.
இந்த பதிவு வெறும் புள்ளிவிவரம்
பொறுட்டோ அல்ல கருத்துக்கணிப்பு சார்ந்ததோ அல்ல. சென்னை ராயபுரம் தொடர்வண்டி
நிலையம் வரும் உணவு தானியங்கள் தொடர்வண்டியில் இருந்து கனரக
வண்டிகளுக்கு மாற்றும் போதுமட்டும் வீணாகும் உணவு தானியங்கள் மட்டும் சில டன்கள்.(1
டன் 1000 கிலோ ) ஆகும்.
சென்னை துறைமுகத்தில் இப்படி வீணாகும் சக்கரை, சோளம் ஆகியவை பல ஆயிரம் கிலோவிற்கும் மேல். இங்கிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருள்களில் கிட்டதட்ட கால்வாசி இப்படி போக்குவரத்துக்கு மூலமாக வீனாகின்றன.இதில் விரைவில் அழுகும் பொருளான காய்கறி, கனிகள் மற்றும் இறைச்சி, மீன் போன்றவற்றின் நிலைமை படுமோசம்.
சென்னை துறைமுகத்தில் இப்படி வீணாகும் சக்கரை, சோளம் ஆகியவை பல ஆயிரம் கிலோவிற்கும் மேல். இங்கிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருள்களில் கிட்டதட்ட கால்வாசி இப்படி போக்குவரத்துக்கு மூலமாக வீனாகின்றன.இதில் விரைவில் அழுகும் பொருளான காய்கறி, கனிகள் மற்றும் இறைச்சி, மீன் போன்றவற்றின் நிலைமை படுமோசம்.
இப்படி வீணாகும் உணவுபொருட்கள்
பெரும்பாலும் அரசு சார்ந்த கையாளுதல் போதுதான் நடக்கிறது. தனியாரின் போக்கு
லாபநோக்கம் கொண்டதினால் இங்கு வீணாகும் அளவு மிக குறைவு.
உணவு பொருட்கள் இடமாற்றம்
செய்யும் பொது அவை சரியாக கட்டபடுவதில்லை (PACKING) அல்லது தரமான பைகள் ஊபயோகிபதில்லை பெரும்பாலும் கிழிந்து
இரைந்துகொண்டே செல்கின்றன. கோடிகளில்
வீணாகும் உணவுபொருட்கள் சில ஆயிரம் செலவின் மூலம் சரிசெய்யலாம். நமக்கென்ன நம்ப
சொத்தா அழிகின்றது என அரசு அலுவலர்களின் மெத்தனபோக்கும் இதற்கு ஒரு காரணம்.
வீணாகும் ஒவ்வொரு தானியமும் ஒரு விவசாயின் பல மாத உழைப்பு உழுபவன் ஒரு நெல்லை கூட
வீணாக்க மாட்டான். உங்கள் சம்பளம் உயர்த்தபடாதபோது, ஞாயமான பதவி உயர்வு கிடைக்காத போது உங்கள் உழைப்பு நிராகரிப்பதை
உணர்வதை போலதான் நம் வீணாகும் ஒவ்வொரு தானியமும். நிராகரிக்கப்பட்ட விவசாயின்
உழைப்பும்.
கவனிக்குமா அரசு!!!.
உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுகொல்கின்றேன்.
Monday, January 30, 2012
செய்தி : மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.
ஆம் இன்று அண்ணா ஹசாரே முதல் சோனியா ,குப்பன் ,சுப்பன் என்ன எல்லோரும் அரசியல் செய்ய காந்தி தேவை படுகிறார்.காந்தி இல்லாத வாழ்வை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது தன மகனின் ஸ்கூல் பீஸ் ,முதல் ஆக்ஸ்போர்ட் வரை காந்தி சிரித்தாக வேண்டும். மூணாவது பொண்டாட்டிக்கு டிவி வாங்க சாரி டிவி ஸ்டேஷன் வாங்க ,சின்ன வீட்டுக்கு பெரிய வீடு வாங்க ,கட்சில பதவி வாங்க ,இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் ஆதரவு கொடுக்க என்ன காந்தி ஆயுளில் செய்ததை விட அச்சில் செய்தது ஏராளம்.
பாவம் மீடியா கூட இதற்கு ஒதுக்கியது தலைப்பு செய்தியில் 30 விநாடி தான். விளம்பர இடைவேளையில் அவளோதான் செய்தி வசிக்க முடிந்தது.
வேறு ஒன்றும் வேண்டாம் உங்கள் அடுத்த தலைமுறைக்கு வரலாற்று புத்தகம் தாண்டி ஒரு உலகை அறிமுகம் செய்யுங்கள் நாம் பெற்றதுகாக என்ன இழந்தோம் என்பதை பற்றி சொல்லுங்கள். சுதந்திரம் போற்ற உயிரை துச்சமென துறந்த தியாகிகளை பற்றி சொல்லுங்கள்.
நாம் அடுத்த தலைமுறையேனும் முதுகெலும்புடன் வாழ பழகிக் கொள்ளட்டும் நாம் நாட்டின் பிணியை தீயிட்டு கொல்லட்டும்.
உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுகொல்கின்றேன்.
Saturday, January 28, 2012
கடவுள்களின் உரையாடல்.
அன்று வழக்கம் போல் அலுவலகம்
முடிந்து தொடர்வண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தேன்.எனது நிறுத்தம்
இரண்டாவதே என்பதால் சன்னல் ஓரம் இருக்கை கிடைத்துவிட கைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டு செவிபேசி மத்தியில் தொலைந்து கொண்டிருந்தேன். அருகில் கை குழந்தையுடன் ஒரு நடுத்தரவர்க தம்பதி அமர்ந்திருந்தனர்.நல்ல கருப்பாக அழகா
இருந்தது குழந்தை. அதன் தாய் அதனுடன் அதன் மொழியில் ஏதோ கொஞ்சிகொண்டிருந்தார். சில
நிறுத்தம் சென்று எதிர்வரிசையில் மற்றும் ஒரு தம்பதி பெண் குழந்தையுடன் வந்து
அமர்ந்தனர்.கைபேசியில் பாடலை மாற்றிவிட்டு சுற்றி ஒரு நோட்டமிட்டேன்.என்னை போல் பலரும் காதில் பாடலுடன் நேரத்தை உழற்ற
முற்பட்டிருந்தனர், சிலர் அருகில் இருந்தவருடன் அரசியல் முதல் ஆகாயம் வரை ஏதேதோ
பேசிகொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த காட்சி கண்ணில்
பட்டது எதிர்வரிசையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்த குழந்தை என் அருகில்
உள்ள குழந்தையிடம் கை நீட்டி தத்தக பித்தக்க வென்று ஏதோ சொல்ல அதை புரிந்தது போல
இந்த குழந்தையும் கீ க்யா என ஏதோ சொல்லிற்று.ஒரு வேலை கடவுள் இருந்து ! சில வேலை கடவுள்களும் இருந்து.!!! பேசிக்கொண்டால் இப்படிதான் இருக்குமோ என தோன்றியது. இதை கவனித்த அந்த குழந்தையின்
தாய் பாப்பாவிற்கு டாட்டா காட்டு என்று சொல்ல, பக்கத்தில் இருந்த குழந்தையின் தந்தை "சே ஹாய் சே ஹாய்" என சொல்லிகொண்டிருந்தார். அப்போதுதான் ஏன் இவர்கள் குழந்தையின் மழலையை
ரசிக்க தோன்றவில்லை ஏன் இவர்கள் இப்படி ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்கள் என்றே
தோன்றியது.
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
இவர்கள் ஒரு பலகினமான சமுதாயத்தை ஒரு
வலுவிழந்த தலைமுறையை வளர்கிறார்கள். சுயம் அறியாமல், தன் குடி, பாரம்பரியம், மொழி என யாதும்
அறியாத அடையாளம் அற்ற பொருள் ஈட்டும்
சந்தை பொருளாக தம் குழந்தையை பார்கிறார்கள்.
ஆங்கில மோகம் கொண்டு அவன் உடை, உணவு மருந்து , என நாம் பின் பற்றி இழந்தது ஏராளம்.
தாய் பாலை போல தாய்மொழியையும் சேர்த்தே
புகட்ட வேண்டியது அவசியம்.
Sunday, January 8, 2012
தமிழரும் தமிழர் உணவும்:
எங்கே செல்கிறோம் நாம் நாகரிகம் என்ற
பெயரில் நாம் நமது உண்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறந்து
கொண்டிருக்கிறோம்.
நாம் முன்னோர்கள் பயிர்செய்து உண்ட
தானியங்கலாகிய கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், வரகு ஆகிய சிறு தானியங்களை அறவே மறந்து
விட்டோம்.
பலர் இன்று அரிசி சோற்றிற்கு
அடிமையாகிவிட்டோம்.கேழ்வரகு தெரியுமா என்றால் அது என்ன புது டெசெர்டா என கேட்கின்றனர்.பிஸா ,பெர்கர் என சில 100 ரூ செலவு செய்யும் இவர்கள் 35
- 40 வயதில் மருத்துவமனைகளில் பல 100 செலவுசெய்கிரார்கள்.
வெளிநாடுகளில் குதிரைக்கு கொடுக்கும் ஓட்ஸ்சை கிலோ 120 - 150
ரூ கொடுத்து வாங்கும் இவர்களுக்கு இந்தியாவின்
மற்றும் தமிழ்நாட்டின் கேழ்வரகு, கம்பு
20 ரூ கொடுத்து வாங்குவது கவுரவ குரைசல்
(ஸ்டேடஸ் ப்ராப்லம்) ஆகிவிடுகிறது. இந்த வெளிநாடுகாரனின் வியாபார தந்திரத்துக்கும்
விளம்பர மோகத்துக்கு அடிமையாகிவிட்டோம்.
இவர்கள் வள்ளுவன் கூறியது போல
கனிஇருப்பக் காய்கவர்ந்தவர்கள். உணவே மருந்தாக உட்கொண்ட தமிழரின்
மரபினை போற்றுவோம் பின்பற்றுவோம்.
Subscribe to:
Posts (Atom)





